10th பெயில் - போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர். - kalviseithi

Oct 15, 2020

10th பெயில் - போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்.

 


கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்புகூட தேர்ச்சி பெறாத நபர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் புகார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 21 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு சொக்கனகள்ளி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லி புதூரில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது வரை பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் போலி சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்றதாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு குண்டலபட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர்.


அப்போது ராஜேந்திரன் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்பதும் அதேபோல் எந்தப் பள்ளியிலும் படிக்காமல் ஊர் சுற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பணம் கொடுத்து பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை போலியாக பெற்று பணியில் சேர்ந்ததும், 21ஆண்டுகளாக அரசாங்கத்திடம் ஏமாற்றி சம்பளம் பெற்று வந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜேந்திரன் போலியான சான்றிதழ் அளித்ததின் நகல்கள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் ஆதாரத்துடன் சமர்பித்துள்ளார்.

6 comments:

 1. அமைச்சர்கள் அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது,ஆனால் tet pass எங்களை மாதிரி ஆசிரியர்களை மட்டும் பணி வழங்காமல் வைச்சு செய்கிறீர்கள் எந்தப்பணியும் வழங்காமல்


  இப்ப 40வயசானவர்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று சொல்வது என்ன நியாயம்
  இதைப் போல் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் இருக்காங்களோ கடவுளுக்கே வெளிச்சம்

  ReplyDelete
 2. இவனை முச்சந்தியில் நிர்வாணமாக நிற்க வைத்து நாயின் மலத்தால் அபிஷேகம் செய்தாலும் வெட்கப்பட மாட்டான்..

  ReplyDelete
 3. தொடக்கக் கல்வி துறையில் இது போல சிலர் உள்ளனர். ஆனால் high school DEO' s control சென்ற பிறகு அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் sslc,hsc,dted உண்மைத் தன்மை அறிய உட்படுத்தும் போது இது போல போலிகளை கண்டறிய முடிகிறது .நியமனம் போதே கண்டிப்பாக உண்மைத் தன்மைக்கு உட்படுத்த வேண்டும் இது,போல்,தவறுகள் நடக்காது

  ReplyDelete
 4. DEO கண்டறிய வில்லை. தனி நபர் அளித்த புகார் மனுவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

  ReplyDelete
 5. சர்வீஸ் புக் ஆன்லைன் பதிவின் போது பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு குரூப் விவரம், மற்றும் இளநிலை கல்வி, DTET அனைத்தையும் சரி செய்தால் மட்டுமே போலி ஆசிரியர்கள் விவரம் தெரியவரும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி