பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: அக்.12-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2020

பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: அக்.12-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.



 பகுதிநேர பி.இ., பிடெக்.  படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்  அக்.12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதுகுறித்துப் பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை  ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறும்போது, "மொத்தமுள்ள 1,465 இடங்களுக்கு 1,201 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 520 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் 12-ம் தேதி காலை 10 மணிக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 14-ம் தேதி நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு 15, 16-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி