பொறியியல் மாணவர்கள் அக்.29-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என்று கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்துப் படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள்ளும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது.
மீண்டும் செப்டம்பர் 19-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம், கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அவகாசம் அளித்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி