அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2020

அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



 நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) 14.10.2020 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்.

புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணாக்கர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களைப் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark) வழங்கப்படும்.

இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் (மொத்தம் 1200 மதிப்பெண்கள்) +2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, மார்ச் 2020 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாகத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தரப் பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச் 2020 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முக்கியக் குறிப்பு:

1. மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக்கொள்ள பள்ளி / தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

2. பள்ளி / தேர்வு மையத்தில் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்”.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.





2 comments:

  1. Kalviseithi admin avarkalaeee..!!!?

    Ungalidam Oru vendor....!!!
    Tnpsc revised annual planner enna achi or eppo varum nnu konjam update pannunga sir.....

    ReplyDelete
    Replies
    1. Vendor illai athu venduhol ( request)...sorry sir...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி