‘நீட் - 2020 ’ தேர்வு முடிவுகள்? : மத்திய கல்வி அமைச்சர் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2020

‘நீட் - 2020 ’ தேர்வு முடிவுகள்? : மத்திய கல்வி அமைச்சர் தகவல்!

 


வருகிற 12ம் தேதி நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியிட வாய்ப்புள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சூசகமாக தெரிவித்துள்ளார். ெகாரோனா தொற்று பரவலால், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, செப். 13ம் தேதி திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. தொற்றுநோயின் தாக்கத்துக்கு மத்தியில், தேர்வுக்கு பதிவு செய்த 15.97 லட்சம் தேர்வர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் தேர்வெழுதினர். கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் ேதர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று தனியார் செய்தி நிறுவனத்திடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறியுள்ளார். 


முன்னதாக, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) செப். 26ம் தேதியன்று தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) கேள்விகளுக்கான பதிலை வெளியிட்டது. இந்நிலையில், நீட் - 2020 தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று என்டிஏ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வு முடிவின் சமீபத்திய விபரங்களை அறிய தேர்வர்கள் அவ்வப்போது என்டிஏ அல்லது நீட் வலைத்தளமான www.nta.ac.in  / ntaneet.nic.in-ஐ பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகமாக இருப்பதால், கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா ெநருக்கடிக்கு மத்தியில், நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இல்லை என்று தேர்வர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. My name is D V Kousik Reddy, I have been preparing for NEET 2020 for the past two years and I have written the exam, but the OMR released has shown that some of my answers have been registered wrong and some of the answers haven’t been registered at all. When I initially checked the key released I got 561/720 but after cross checking the key with OMR released, I'm only getting 402/720. This has put on a hold for me in my education. My family and I have been completely devastated after seeing this. I had hopes of joining a renowned medical college and advancing my career but now I have to wait another six months before I can retake the exam. The personal details in my OMR, including the sign are correct but the answers are not. I hope the concerned officials see this and resolve the issue as soon as possible inorder for me to flourish in my education.
    This is my roll no.- 4101117143.
    This is my application no.-200410685195.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி