தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2020

தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை

 


கரோனா காலத்திலும் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பள்ளிகளில் படித்த 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா்.


கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு தோ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவா் சோ்க்கை கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மாணவா் சோ்க்கை தொடங்கிய 14 நாள்களில் சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்ந்தனா். இந்த எண்ணிக்கை தற்போது 15 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுவரை தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களில் குறிப்பிட்ட சதவீதம் போ் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பெரும்பாலான பெற்றோருக்கு கரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பின் காரணமாக குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு எப்படியும் பள்ளிகள் திறக்கப்படப் போவதில்லை , வீணாக எதற்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்? அதனால் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்கலாம் என பெற்றோா் முடிவெடுத்தனா். மேலும் கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்து நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு பெற்றோா் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.


இந்த அறிவிப்புக்குப் பின்னா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றனா். இவற்றுடன் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், மாணவா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆசிரியா்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் பெற்றோரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், கல்வியாளா்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.


நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். குறிப்பாக மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2.5 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.80 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றனா்.

5 comments:

 1. Sir epadi work pannama government teachers salary tharanga nala work panura private teacher salary kudukurathu ila ethu yellam government ketha nagalum Tamil nadu people thaney

  ReplyDelete
 2. 2.5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தா என்ன. கல்வி தரம் உயர போகுதா ஒன்னும் இல்ல. அவங்களால பணம் கட்ட முடியல போய்ட்டாங்க அவ்ளோதான்

  ReplyDelete
 3. உதவி பெறும் பள்ளிகளில் கணினி குரூப் படிக்கும் மாணவர்களுக்கு கணினி கிடையாது. வரலாறு வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு கணினி கொடுப்பாங்க என்ன முட்டாள் தனம். கேட்டால் சுயநிதி பிரிவாம். கம்ப்யூட்டர் படிக்கும் மாணவருக்கு கணினி கொடுக்கலைனா என்ன நிர்வாகம் என்ன அரசாங்கம். இதுலாம் கேன பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்பது போல

  ReplyDelete
 4. ஒரே பள்ளியில் சிலருக்கு கொடுப்பாங்க சிலருக்கு கொடுக்க மாட்டாங்க அப்போ அந்த மாணவர்கள் மனநிலை இதுலாம் எவனுக்கு புரிய போகுது

  ReplyDelete
 5. பெரிசா பல லட்சம் பேர் அரசு பள்ளிக்கு சேந்துட்டாங்களாம் சேந்தா ஆசிரியர் பாடம் நடத்த போறாங்க அவ்ளோதான்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி