TNEA COUNSELLING SCHEDULE 2020 : என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2020

TNEA COUNSELLING SCHEDULE 2020 : என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடக்கிறது.



 என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. கலந்தாய்வு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி, 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. சிறப்பு பிரிவில் உள்ள விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 785 இடங்களில் 98 இடங்களும் நிரம்பி இருக்கின்றன. சிறப்பு பிரிவில் நிரம்பாத இடங்கள் பொதுப்பிரிவு இடங்களில் சேர்க்கப்படும்.


அந்த வகையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகளுக்கான 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.


அதன்படி, 1 முதல் 12 ஆயிரத்து 263 தரவரிசையில் (கட்-ஆப் 199.667 முதல் 175 வரை) இருக்கும் மாணவர்களுக்கு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும், 12 ஆயிரத்து 264 முதல் 35 ஆயிரத்து 167 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 174.75 முதல் 145.5 வரை) உள்ள மாணவர்களுக்கு 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், 35 ஆயிரத்து 168 முதல் 70 ஆயிரத்து 300 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 145 முதல் 111.75 வரை) இருப்பவர்களுக்கு 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும், 70 ஆயிரத்து 301 முதல் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 தரவரிசை(கட்-ஆப் 111.5 முதல் 77.5 வரை) வரையில் உள்ளவர்களுக்கு 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


இதில் மாணவர்கள் முன்பணம் செலுத்துதல், விருப்ப கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் அதனை இறுதி செய்தல் போன்றவற்றை செய்தபின்னர் இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி நிறைவு பெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி