276 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2020

276 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

 


சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களைச் சேர்ந்த 276 மெட்ரிகுலேஷன் பள்ளி களுக்கு, தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில்,சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று அம்பத்தூர், சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளிக்கல்வி,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்கீழ் செயல்படும் 65 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்கீழ் செயல்படும் 104 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 169 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கினார்.

இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகதொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், பள்ளிக்கல்வி இயக்குநர்கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குநர் கருப்பசாமி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனிதா, வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னை பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் செங்கை, காஞ்சி மாவட்டங்களில் உள்ள 107 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர்அங்கீகார ஆணையை வழங்கினார்.

6 comments:

  1. உடற்கல்வி ஆசிரியர் Uணி நியமனம் செய் ம

    ReplyDelete
  2. ஆசிரியர்களின் வாழ்வில் சாவு மணி அடிக்க நினைக்கும் இந்த கூறு கெட்ட ஆட்சிக்கு நாம் சாவு மணி அடிப்போம்

    ReplyDelete
  3. Sengkottai iyavikku vendukol plz published tntet compatitive exam

    ReplyDelete
  4. வேலை இல்லாமல் வறுமையுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள். இதுதான் இப்போதைய ஆட்சியாளர்களின் மைண்ட் வாய்ஸ். உங்களுக்கு கேக்கலையை எனக்கு நல்லா சத்தமா கேக்குது. நா கூலி வேலைக்கு போக பழகிகிட்டேன். தாமதிக்கிய வேண்டாம் நண்பர்களே வாங்க நீங்களும் பட்டதாரி கூலியாகலாம்.வறுமையை ஒழிக்கலாம். 🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️

    ReplyDelete
  5. வேலை இல்லாமல் வறுமையுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள். இதுதான் இப்போதைய ஆட்சியாளர்களின் மைண்ட் வாய்ஸ். உங்களுக்கு கேக்கலையை எனக்கு நல்லா சத்தமா கேக்குது. நா கூலி வேலைக்கு போக பழகிகிட்டேன். தாமதிக்கிய வேண்டாம் நண்பர்களே வாங்க நீங்களும் பட்டதாரி கூலியாகலாம்.வறுமையை ஒழிக்கலாம். 🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி