" கற்போம் எழுதுவோம் " - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - kalviseithi

Oct 24, 2020

" கற்போம் எழுதுவோம் " - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய வயது வந்தோர் கல்வி திட்டமானது , முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு Volunteer Mode அடிப்படையில் மட்டும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , அண்மையில் முடிந்த கற்கும் பாரதம் திட்டமானது , தமிழகத்தில் , அரியலூர் , பெரம்பலூர் , விழுப்புரம் , திருவண்ணாமலை , தருமபுரி , கிருஷ்ணகிரி , சேலம் , ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் , 108 ஊரக ஒன்றியங்களில் , 3602 கிராம பஞ்சாயத்து அளவில் , 2001 மக்கள் தொகைக்கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 25.39 இலட்சம் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.


மாவட்டங்களில் கல்லாதோர் எண்ணிக்கை : 


2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி , தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் , 15 வயதுக்குமேற்பட்ட 1.24 கோடி பேர் முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இவ்விவரங்கள் இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. 


Dir Proceedings - Download here...


1 comment:

  1. இந்த ததன்னார்வலர்கள் யார் Rssஇந்து முன்னனியா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி