முன் ஊதிய உயர்வு (Advance Increment) குறித்த அரசாணைகள் மற்றும் நடைமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2020

முன் ஊதிய உயர்வு (Advance Increment) குறித்த அரசாணைகள் மற்றும் நடைமுறைகள்

 

( தற்போது அரசாணை 37, நாள்: 10-03-2020ன் படி முன் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது )


(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.


(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)


(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.


(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)


(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/ சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)


(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

6 comments:

  1. ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு தற்போது உள்ளதா.

    ReplyDelete
  2. 10.03.2020 முன்னர் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டா

    ReplyDelete
  3. 10.03.2020 முன் முடித்தவர்க்கு ஊக்க ஊதியம் ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. yes it is available you must sent requisition letter to finance department through your department with enclose proper documents

      Delete
  4. பேர் தான் தமிழ் நாடு அரசு....
    ஆனா அரசாணை பூராவும் ஆங்கிலம் தான்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி