சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2020

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு



அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.


அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.


அதன்படி, கடந்த மே 31-ந்தேதி முதல் நிலைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள்.


இந்நிலையில்,  அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

6 comments:

  1. 6.5 lacs எழுதின omr answer sheet valivate பன்னி, result 19 நாள்
    ல விட்டுட்டாங்க. ஆனா நம்ம state government, 50000 பேரு எழுதின online ல எழுதின beo exam resulta 10 மாசமா விடாம இருக்காங்க.

    ReplyDelete
  2. Ya..beo ரிசல்ட் விடுரதுல ஏன் இவ்வளவு தாமதம்...

    ReplyDelete
  3. மத்திய அரசு தேர்வாணையமும் விரைவா வேலை செய்யனும்..நேர்மையாவும் செயல்பட முன்வரனும்.

    ReplyDelete
  4. நம்ம தமிழ்நாட்டுத் தேர்வாணையம் எப்படி செயல்படுது!?

    ReplyDelete
  5. mmmmmmmmahdhehejdudysyehwhshshsjsjsjajajajahayshsjskisidjkddksmemduushehejdjdjddjjd

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி