பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு. - kalviseithi

Oct 25, 2020

பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு.

 


பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..

 அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியை கரூர்


மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

 தர்மபுரி ஆட்சியராக இருந்த கார்த்திகா கன்னியாகுமரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. TRB யில் பணி நியமனமே கிடையாது
    ஆனால் TRB chairman மட்டும் Change
    ஆகிட்டோ இருக்கு😇😇😇😇

    ReplyDelete
  2. நேர்மையாக பணியாற்றினார்.. திருவள்ளூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுந்தரவல்லி.. அங்கன்வாடி ரேசன் பணிநியமனங்களில் கட்சிக்காரர்கள் சொன்னவர்களுக்கு பணி வழங்கவில்லையாம் மாற்றிவிட்டீர்கள்.அதே காரணுத்துக்காக அடுத்த ஆட்சியர் மகேஷ்வரி மாற்றப்பட்டுள்ளார்.இதே நிலைமை நீடித்தால் ஆட்சியும் அதிகாரமும் மாறும்.நேர்மைக்கு வழிவிடுங்கள்...கடமை கண்ணியம் கட்டுப்பாடு வழியில் வந்தவர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி