அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு - kalviseithi

Oct 27, 2020

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

 

 புதுவையில் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு அரசு ஊழியர்க ளுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது : தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு ஊழியர்களுக்கு 2019-20 - ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித் துறைக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார் . அதனைத் தொடர்ந்து , மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ' பி ' ( அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் தவிர்த்து ) மற் றும் பிரிவு ' சி ' ஊழியர்களுக்கும் , முழு நேர தற்காலிக ஊழியர்கள் 2019-20 - ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார் . இதன் மூலம் ' பி ' , மற்றும் ' சி ' பிரிவு ஊழியர்களுக்கு போனஸாக ரூ .6,908 - ம் , முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ .1200 - ம் வழங் கப்படும் . இதனால் , அரசு ஊழியர்கள் மற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்கள் சுமார் 26,000 ஊழியர்கள் பலனடைவர் . இதனால் புதுவை அரசுக்கு சுமார் ரூ .18 கோடி கூடுதலாகச் செலவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 comment:

  1. Private school ,college teacher rs 2000/ kodukalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி