ஆசிரியர் கலந்தாய்வு ரத்தால், புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2020

ஆசிரியர் கலந்தாய்வு ரத்தால், புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள்!

 

கொரோனாவால் கலந்தாய்வு ரத்து புரோக்கர்கள் உதவியுடன் இடமாறுதல் பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்கள் உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சி - பத்திரிகை செய்தி.கொரோனாவால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் , புரோக்கர்கள் உதவியுடன் வெளி மாவட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் , உள்ளூர் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவியதை தொடர்ந்து , கடந்த மார்ச் முதல் 9 மாதமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் , இந்தாண்டு பள்ளி கல்வித்துறையில் வழக்க மாக ஜூன் மாதம் நடை பெறும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வும் நடத்தப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது . இதை பயன்படுத்தி , விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று கொடுக்க , நாமக்கல்லில் உள்ள கல்வித் துறை புரோக்கர்கள் வரிந்து கட்டிகொண்டு களம் இறங்கியுள்ளனர் . வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் , நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் கல்வித்துறை புரோக்கர்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுவருகிறார்கள்.

4 comments:

 1. நிர்வாக மாறுதலுக்கு அனுமதிக் கடிதத்தில் கையொப்பம் இடுப்பவரே....... இதற்குமுழுப் பொறுப்பாவார் அவரே ஆசிரியர்களின் வயித்தெரிச்சலை பெற்றுக் கொள்பவர் ஆக திகழ்கிறார்...... அவருக்கு நம் வாழ்த்துக்களை சொல்லி விடுவோம் வாழ்க ஜனநாயகம் வளர்க கல்வித்துறை

  ReplyDelete
 2. I appointed as BT Maths in a ghss near vedaranyam,Nagai dt in 2012
  My native is Trichy dt.
  8 people appointed with me are got transfers from brokers
  2 to Trichy,3 to madurai ,1 to nellai,1 to karur,1 to chennai.
  All are got transfer using same broker

  ReplyDelete
 3. அதுவும் இந்த பொம்பள டீச்சருங்க தாலிய வித்து கூட டிரான்ஸ்பர் வாங்குவாளுங்க. திருட்டு முண்டங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி