கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை! - kalviseithi

Oct 19, 2020

கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

 


பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி 'டிவி' வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.


மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து, அரசின் முடிவை தெரிவிக்க, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி, மெட்ரிக் இயக்குநர்கருப்பசாமி, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் நாகராஜ முருகன் மற்றும் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, பள்ளி கல்வி கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் இணை இயக்குநர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 


பொதுத் தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக் குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், இரண்டாம் பருவ புத்தகம் வழங்குதல், 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

8 comments:

 1. நண்பர்களே தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்..இந்த செய்தியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கின்றனர்

  ReplyDelete
 2. செங்கோட்டையன் பள்ளி கல்வி துறைக்கு அமைச்சர் ஆனது மாபெரும் வெட்க கேடு....

  ReplyDelete
 3. 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இக்குழுவில் இணையவும்

  https://chat.whatsapp.com/EuNi7YHbYowBTgtn0Dqytg

  ReplyDelete
  Replies
  1. My number 8682094873 tntet 2013
   Pass join by whats app

   Delete
  2. My number 8072362221 tntet 2013
   Pass join by whats app

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி