ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் வழக்கு. - kalviseithi

Oct 22, 2020

ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் வழக்கு.

 ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை அக் .21 : பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏ எஸ்பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை , முறை யாக பின்பற்றவில்லை என கோரி மதுரையைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த வழக்கில் மத் திய அரசு , மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது . மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் , மதுரையைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பெண் பூரணசுந்தரி தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2019 - ஆம் ஆண்டு நடந்த குடிமைப்பணி கள் தேர்வில் 286 - ஆவது ரேங்க் பெற்றேன் . எனக்கு இந்திய வரு வாய்ப் பணியில் , வருமான வரித்துறையில் பணி ஒதுக்கீடு செய் யப்பட்டது . பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இடஒதுக்கீடு முறையாக பின் பற்றவில்லை . மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 - இன் படி எனக்கு ஐஏஎஸ் பணி வழங்க மத்திய அரசு , மத்தியப் பணியாளர் தேர்வாணையத் துக்கு உத்தரவிட வேண்டும் . இடஒதுக்கீட்டை முறையாக பின்பற் றாமல் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செ ய்ய வேண்டும் என கோரியிருந்தார் . இந்த மனுவை விசாரித்த மத் திய நிர்வாகத் தீர்ப்பாயம் , மனு தொடர்பாக மத்தியப் பணியாளர் துறை செயலர் மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது . மேலும் கடந்த 2019 - ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வின்படி வழங்கப்பட்ட நியமன ஒதுக் கீடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்த ரவிட்டு விசாரணையை வரும் 2021 - ஆம் ஆண்டு ஜனவரி மாதத் துக்கு ஒத்திவைத்துள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி