பத்தாம் வகுப்பு மாணவா்கள் நாளை முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம் - kalviseithi

Oct 22, 2020

பத்தாம் வகுப்பு மாணவா்கள் நாளை முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

 


பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில், வெள்ளிக்கிழமை (நவ.23) முதல் பதிவு செய்யலாம்.


இது தொடா்பாக வேலைவாய்ப்புத்துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரம்: பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே , அம்மாணவா்களின் கல்வித் தகுதியை அவா்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இணைந்து மேற்கொள்ள சாா்நிலை அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.


அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.


அனைத்து பதிவுதாரா்களுக்கும் சான்று வழங்கப்படும் நாள் முதல் 15 நாள்கள் வரை ஒரே பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும். மாணவா்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு அட்டை வழங்குவதில் அலட்சியமோ, அலைக்கழிப்போ செய்யக் கூடாது.


மாணவா்களின் ஆதாா் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். மாணவா்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பான் அட்டை, கடவுச் சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை முகவரிக்கான அடையாள அட்டையாகக் கருத வேண்டும்.


இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை (அக்.23) முதல் நவ.6-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

 1. *தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*

  மார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே....

  எட்டு மாதங்களாக வாங்கும் 8000 - 15000 சம்பளத்தில் 20% அல்லது 30 சதவீதத்தில்
  சம்பளத்தோடு அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வேதனைவோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்.....

  இதைப் பற்றி பேசவோ??? ஆலோசிக்கவும்.
  எவருக்கும் திராணி இல்லை....

  மற்ற அனைத்து துறைகளும்
  சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன...

  தனியார் கல்வி ஆசிரியர்கள்
  தின கூலி வேலை,
  தேங்காய்,காளான் விற்க,
  பஜ்ஜி கடை,
  காய்கறி கடை வைத்தும், இரவு நேர வாட்ச்மேன் வேலை, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போட
  இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

  ஆசிரியர் பணி அறப்பணி,
  இன்று
  மறுவி
  ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது

  ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்...

  அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர...

  வங்கிகளில் பர்சனல் லோன் அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்...

  ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் ????
  என நித்தமும் மன வேதனையுடன் உள்ளனர்.....

  கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்....

  தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது....

  அட்மிஷன் சேர்க்கை,
  கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல்,
  வருகைப் பதிவை தக்கவைத்தல்,
  மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல்,
  ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல்,
  உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல்,
  நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல்,
  ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல்,
  தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,
  விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்,
  படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்...

  இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து
  தனியார் பள்ளி ஆசிரியர்கள்.

  காலை7 -8 மணி
  இரவு 5-10 மணி வரை தினமும் தனி வகுப்புகள் என
  நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி....
  மன அழுத்தத்தில்.....

  ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத ,

  பிச்சை எடுக்காது குறைகளுடன்.......

  அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும்,
  வாதமும் செய்யவில்லை......

  *தனியார் ஆசிரியன்*
  *ஒரு நாதியற்றவன்*
  *பாவப்பட்டவன்*இந்த செய்தியை நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் பார்க்கும் வரை அனைவரும் பகிரவும், ஆசிரியர் மீது பற்றுள்ள அனைவரும் இச்செய்தியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி