அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை! - kalviseithi

Oct 26, 2020

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை!

 அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் என்பவர் போலி சான்றிதழில், 21 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வழியே சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, மாவட்ட கல்வி அலுவலகம் வாரியாக, முதுநிலை ஆசிரியர்களிடம் சான்றிதழ் நகல் சேகரிப்பு துவங்கி உள்ளது.

1 comment:

  1. வேறு யாரோ ஒரு புண்ணியவானுக்கு கிடைக்க வேண்டிய பணி அதனை கிருஷ்ணகிரி ராஜேந்திரன் அபகரித்துக் கொண்டார் இப்படி இன்னும் எத்தனை இராஜேந்திரன்களை இந்த தமிழ்நாடு பெற்றிருக்கின்றதோ ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி