சட்ட மாணவர்கள் சேர்க்கை தேர்வுக்கு தடை கிடையாது! - kalviseithi

Oct 10, 2020

சட்ட மாணவர்கள் சேர்க்கை தேர்வுக்கு தடை கிடையாது!

 

நாடு முழுவதும் 23 சட்டப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய அளவில் ‘கிளாட்’ என்ற பெயரில்  பொது தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது, கடந்த மாதம் 28ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இது முறையாக நடத்தப்படவில்லை,  கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டு இருந்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.


 எனவே, இத்தேர்வுக்கு தடை விதிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் 5  மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, தேர்வுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி  செய்தது. அதே நேரம், முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குறைதீர்ப்பு மையத்தில் 2 நாளில் தங்கள் குறைகளை முறையிடும்படி  மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி