அரியர் தேர்வு வழக்கு: உயர்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சருடன் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2020

அரியர் தேர்வு வழக்கு: உயர்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சருடன் ஆலோசனை

 


அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் உள்ளிட்ட நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் கலை, பொறியியல் கல்லூரியில் அரியர் வைத்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு, பல்கலைக் கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

ஆனாலும் சட்டப்பேரவையில் அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


இந்த நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி்.வி.சண்முகத்தை அவரது இல்லத் தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியர் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப் பட உள்ள நிலையில் தொடர்ச்சியாக அமைச் சர்கள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 comments:

  1. அறிவு கெட்ட கூமுட்டைகளா! போலி பகுதிநேர ஆசிரியர் என்று யாரைத்தான் கூறுகிறீர்கள்? இப்படி கூறிய பிறகு தான் அரசு மீண்டும் தகுதியை நிர்ணயம் செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பைச் செய்தது. அதில் யாரும் போலி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல்?. இந்த அரசு கல்வித்துறையில் யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி நல்வாழ்க்கையை படித்தவர்களுக்கு வழங்கப்போவதில்லை. யாரும் தகுதி இல்லை என்றால் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்தவர்கள் போலிகளா? இந்த ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வலி தெரிவதில்லை. தெரிந்திருந்தால் இப்படி ஒரு மோசமான வேலைவாய்ப்பைக் கொடுத்து வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வேலை செய்ய உத்தரவிட்டு மிகவும் மட்டமான கொத்தடிமை வேலையை விட 5000 ரூபாய்க்கு நியமிக்கின்றோமே மற்ற நாட்களில் என்ன செய்வார்கள்? பத்தாண்டுகளாக இவர்களை இப்படி வைத்திருக்கின்றோமே இவர்களுக்கும் குடும்பம் உண்டு தானே? குடும்பத்திற்கு குறைந்த பட்சம் இவ்வளவு பணம் வேண்டுமே என்ற அடிப்படை மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு இல்லாமல் நீங்கள் திட்டப் பணியாளர்கள் என்று கூற எப்படி மனம் வருகிறது? உங்களால் திட்டப்பணியிலிருந்து மாற்றி சம்பளம் கொடுக்க முடியாதா? இதில் ஏழைகள் தான் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவோமே என்ற எண்ணம் துளியும் இல்லை. யார் குடும்பம் கெட்டால் என்ன என்ற எண்ணம். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளியில் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரவு பகல் பாராமலும் (கணிப்பொறி ஆசிரியர்கள்) உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் அறிவர். இங்கு மனிதாபிமானம் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது. தகுதித் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து அதற்காக கடின உழைப்பைக் கொடுத்தவர்கள் தவித்து வருகிறார்கள். பணி நியமன தடைச் சட்டம் கொண்டுவரும் இந்த ஆட்சியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் நிரப்ப மனமில்லாமல் வருடக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி வைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  2. Idhuku avasara alosanai ineyum part time teachers wait panom onnu nadakathu ine scl la office work part time teachers pana venam

    ReplyDelete
  3. Arrear all pass வரணும் not paid studentக்கு ஒரு வாய்ப்பு தரணும்.
    Covid lockdown ஆல் fees pay பண்ண முடியாமல் போயிடுச்சு.

    Tuition fees pay panna engalukku exam fees pay panna theriyadha?

    Covidala fees pay panna mudiyala itharku yar kaaranam govt thane
    Govt veetaivittu velia pogatheenganu
    Sonnanga athai follow panninom
    Atharku govt enga vazhkaiyil vilaiyadivittathu.

    Engalukku oru varusham veena pogum.
    Higher studies panna mudiyamal oru varudam veenagum.

    Not paid students list eduthu athai senra varudam fees pay panna listஐயும் compare pannal theriyum,
    Covid lockdownala thanu theriyum.

    Aanal govt solranga fail aayiduvomnu
    Therinjuthan nanga fees pay pannalayam.

    Engalukkum govt oru chance tharanum.



    ReplyDelete
  4. Not paid studentkum oru chance tharanum.

    ReplyDelete
  5. Anna universityla oru sila varudathil paditha maanavargallukku
    Fees pay panna oru chance koduthu
    15,16,17 kulla pay panna sonanga
    Athupola not paid studentukkum oru chance tharalamla.

    Govt manathai vaithaal ellam mudiyum.
    Please help to all.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி