நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி; என்.டி.ஏ. இணையதளத்தில் இருந்து ரிசல்ட் விவரம் நீக்கம்! - kalviseithi

Oct 17, 2020

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி; என்.டி.ஏ. இணையதளத்தில் இருந்து ரிசல்ட் விவரம் நீக்கம்!நீட் தேர்வு முடிவுகள் நேற்று (அக்.16) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன.


திரிபுராவில் 3000 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில் 88 ஆயிரம் பேர் எழுதியதாக முடிவுகளை அறிவித்து இருந்தது, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ).


அதேபோல் உ.பி., உத்தரகாண்ட், தெலுங்கானா மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களில் பலருக்கும் முடிவுகள் வெளியாகவில்லை.


இந்த நிலையில் என்.டி.ஏ., நீட் முடிவுகளை தனது இணையதள பக்கத்தில் இருந்து திடீரென்று நீக்கி இருக்கிறது.


தவறுகள் சரி செய்யப்பட்டு, சரியான முடிவுகள் இன்று (அக்.17) மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் என்.டி.ஏ. அறிவித்துள்ளது.


இதனால் ஏற்கனவே வெளியான தேர்வு முடிவுகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி