ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை : வட்டியில் குறிப்பிட்ட தொகையை திரும்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2020

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை : வட்டியில் குறிப்பிட்ட தொகையை திரும்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவறாமல் கடனுக்கான தவணை செலுத்தியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான மக்களுக்கு வருவாய் இழப்பை ஏற்பட்டுள்ளது. வங்கிக்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து 6 மாதங்களுக்கு தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. 


இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவணை காலத்திற்கு வட்டிக்கு வட்டி விதிக்கக் கூடாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ரூ. 2 கோடி வரையிலான கடன்களை பெற்று தவணை நீட்டிப்பு கோரியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப் படாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் 6 மாத தவணை நீட்டிப்பை தேர்வு செய்யாத கடன்தரார்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஆளுமையின் கீழ் உள்ள வங்கிகளுக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான 6 மாத தவணை செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி