இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2020

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.


இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் - ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வு முடிவுகளை www.ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது www.nta.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி