சத்துணவுப் பணியாளர் தேர்வு நடைமுறை நிறுத்திவைப்பு: தமிழக அரசு - kalviseithi

Oct 8, 2020

சத்துணவுப் பணியாளர் தேர்வு நடைமுறை நிறுத்திவைப்பு: தமிழக அரசு

 


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவுப் பணியாளர்களுக்கான தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.


இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

 1. கொரானாவை காரணமாக சொல்லாதீங்க. 5 லட்சம்,7 லட்சம்,10 லட்சம் என பேரம் பேசி அமைப்பாளர் வேலை, சமையலர் வேலைகளை விற்பனை செய்து கல்லா கட்டிய பிறகு சம்பந்தம் இல்லாத காரணம் சொல்றீங்க.

  ReplyDelete
 2. கௌரவ பிச்சை (பிச்சை எடுப்பவன் அரசன் பிச்சை கொடுப்பவன் ஆண்டி)

  ReplyDelete
 3. அடுத்த ஆட்சியை பிடிக்க பிச்சை எடுத்து இந்த அரசு!! சீனியாரிட்டி வைத்து பணி நியமனம் செய்ய வேண்டியது தானே...MGR இததான செய்தாரு இந்த செயலில் அவரை பின்பற்றலாமே இந்த ஊழல் அரசு...

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொ்னீர்கள்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி