CPS - பழைய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட வல்லுநர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது ? கெடு முடிந்ததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2020

CPS - பழைய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட வல்லுநர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது ? கெடு முடிந்ததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்!



பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு , 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 23 - ம் ஆண்டு ஏப்ரல் 1 - ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர் கள் , ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தின்படி , அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் , தர ஊதியம் ( கிரேடு பே ) , அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது....



3 comments:

  1. We want minimum pension for in old age

    ReplyDelete
  2. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி