ஆசிரியர்கள் NISTHA Online Course -ல் எவ்வாறு இணைய வேண்டும் ? பயிற்சிக்கான வழிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2020

ஆசிரியர்கள் NISTHA Online Course -ல் எவ்வாறு இணைய வேண்டும் ? பயிற்சிக்கான வழிமுறைகள் வெளியீடு.


மாநிலத்திட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளரின் தொலைப்பேசி வழி செய்தி படி NISTHA Online Course -ல் MHRD மற்றும் NCERT மூலம்  01.10.2020 அன்று முதல் நடைபெற உள்ளது - திருவாரூர் CEO செயல்முறைகள்.



* இப்பயிற்சியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.

* அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். 

* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்,.

* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* QRScanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course -ல் இணைய வேண்டும்.

* மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் , அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.

* சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.

* ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG ( சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள் , DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும். 


மேற்காணும் பணியினை விரைவாக செய்து முடிக்க அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொ ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி