SI EXAM - - இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2020

SI EXAM - - இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தடை!

 


எஸ்.ஐ தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது. 


கடலூர், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மையங்களில் படித்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். புதிதாக எஸ்.ஐ பணிக்கு தேர்வு நடத்த உத்தரவிட கோரி பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், 3 பேர் குழு அமைத்து முறைகேடு தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வாடிப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஐ தேர்வு நியமனம் தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 3 பேர் குழுவின் விசாரணை முடியும் வரை தேர்வானவர்கள் பட்டியலை இறுதி செய்ய  நீதிபதிகள் தடை விதித்தனர்.

3 comments:

  1. நேர்மையான முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு கடும் பாதிப்பு...
    குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்...
    அது வரை விண்ணப்பதாரர்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மாதந்தோறும் ரூ.10000/- வழங்க வேண்டும் (நேர்மையான முறையில் தேர்வை நடத்த தெரியாததால், முறைகேட்டை தடுக்காததால், பட்டதாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால்)

    நான் சொன்னது சரியா?!

    ReplyDelete
  2. தேர்வை நடத்த வேண்டிய தேர்வாணையங்கள்
    முறைகேட்டை மட்டுமே நடத்தும் போது நட்ட ஈடு தர வேண்டும்....
    வழக்கு இப்படி தொடருங்கள்...
    வெற்றி கிட்டும்....
    பட்டதாரி வயசு கூடுது இல்ல.... அரசாங்கத்துக்கு ஊதிய செலவு மிச்சம்னு கேஸ் விழ முறைகேட்டை ஊக்குவிக்குது....

    ReplyDelete
  3. நேர்மை என்றும் தோற்பது இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத நாங்கள் தயாராக உள்ளோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி