TET சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது :தகவல் பலகைகளில் வெளியிட உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2020

TET சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது :தகவல் பலகைகளில் வெளியிட உத்தரவு.



 மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற விவரத்தை கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற தேசிய ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 50-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சிக்கான காலக்கெடுவை ஏழு ஆண்டில் இருந்து வாழ்நாளுக்கானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


 இது ஏற்கெனவே தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அனைத்து ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:”மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தேசிய கல்வி ஆசிரியா் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 எனவே, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளின் முதல்வா்கள், மேற்குறிப்பிட்ட தகவலை பி.எட்., எம்.எட். பயிலும் ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கு அறிவிப்பு பலகை மூலமாக இந்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் ஆசிரியா்கள் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியா் பணிக்குத் தகுதிப் பெற்றவா்கள் என தேசிய


ஆசிரியா் பயிற்சி நிறுவனம் 2010- ஆம் ஆண்டு அறிவித்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம், 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடா்ந்து 2013, 2017, 2019ஆம் ஆண்டுகளில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.


 தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற சுமாா் 80 ஆயிரம் ஆசிரியா்களின் தகுதி சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15 comments:

  1. Antha board la display panni Enna use da lusungalaaaaaa..... Already TET pass pannavangalukku posting podungada...... Manguni sen gotta amaichare...... Erode pakkam vanthana unakku செருப்பு மாலை தான் மகனே....

    ReplyDelete
  2. நன்றி கல்வி அமைச்சரே!!
    பணிநியமனம் அம்மா மறைந்தநாளிருந்து ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் போடலையே அது ஏன்?
    இப்ப மாணவர் சேர்க்கை வரலாறு காணத அளவில் சேர்ந்துள்ளனர்
    மற்றும்7.5இட ஒதுக்கீடு வரப்போகுது

    ReplyDelete
  3. டேய். Appointment போடுடா

    ReplyDelete
  4. காலம் உருண்டு கொண்டே இருக்கிறது யோசித்தது போதும் இப்போதாவது பணி நியமனம் செய்யுங்கள் பணி கிடைக்கும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் எங்கள் அனைவரின் குடும்பங்களும் பல வருடங்களாக ஆழ்ந்த நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றோம். மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் பணி நியமனம் சாத்தியம் அல்லவா முன்னாள் முதல்வர் தற்போது இருந்து இருந்தால் எங்கள் அனைவருக்கும் பணி கிடைத்திருக்கும் அவர்கள் வழியில் ஆளும் நீங்கள் அவரைப் போலவே செயல் பட்டால் நன்றி சொல்ல காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உன் நன்றி எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. பெட்டி பெட்டியா பணம் கொடுத்தால் உடனடியாக பணி நியமனம் செய்யப்படும்..

      - ஆளும் அரசு.

      Delete
    2. அரசின் பதிலுக்கு நன்றி.

      Delete
  5. tet certificate nan etukkavillai ippa eppati etuppathu 2017 tet

    ReplyDelete
  6. 2017tetcertificate etukka villai ippa eppati etuppathu

    ReplyDelete
    Replies
    1. waste certificate athu! appdinu-nu engappan solrar nanba. maanamey poguthu

      Delete
  7. Verum certificate mattum vachukittu vazkai muzukka nanga enaa pandrathu

    ReplyDelete
  8. நல்ல ஆணியில் தொங்கவிடவும்.

    ReplyDelete
  9. 3500 ஆசிரியர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை அமைச்சர் கூறினாரே என்ன ஆச்சி எதேனும் தகவல் தெரியுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி