பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2020

பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு.

 


இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக UGC இணை செயலாளர் சௌகான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மத்திய அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை தவறாமல் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அந்தந்த மாநிலங்களின் இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரங்களின்படி, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த வகையில் நிரப்பப்டாமல் காலியாக இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், மாணவர் சேர்க்கை, ஆகியவற்றை தாமதமின்றி நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது

    ReplyDelete
  2. கேட்டுக்கா பா கல்வி அமைச்சரு...

    ReplyDelete
  3. TMK aadchikku vanthonea ethalam seiyyanumnu ADMK go send pannirukanga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி