ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2020

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 

2015-16ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (அறிவியல், சமூக அறிவியல்) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கும் பொருட்டு அவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்.



2015-2016ம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் பட்டியல் பார்வை 1 ல் படிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதம் வாயிலாக பெறப்பட்டது. மேற்படி பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுள் 30 நபர்கள் அறிவியல் படத்திற்கும் 50 நபர்கள் சமூக அறிவியல் பாடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பார்வையில் கண்ட இவ்வலுவலக செயல்முறைகளில் கலந்தாய்வு மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்டவாறு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யக் கோரி சில முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து தனித் தனியாகக் கருத்துருக்கள் வந்த வண்ணம் உள்ளன. 2015-16ம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை ( Common order ) வழங்க ஏதுவாக அவ்வாண்டில் பணியில் சேர்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் இதர விவரங்களுடன் படவாரியாக தொகுத்து எவரது பெயரும் விடுபடாமல் கருத்துருக்களை விரைவில் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


DSE - Proceedings Download here...



8 comments:

  1. அதானே பாத்தேன்...
    ஏதாவது டூப்ளிகேட் ஆர்டர்ல கருப்பு ஆடு உள்ள வந்துடுச்சோன்னு பயந்துட்டேன்....
    ஏன்னா pg trb 2019 அப்பொய்ன்மெண்ட் டீடெயில்ஸ் அப்படி தானே கேட்டீங்க....

    ReplyDelete
  2. https://youtu.be/uNw3R6sLpj4
    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  3. Pg trb second list varuma please anyone tell me

    ReplyDelete
  4. Please tell second list varuma sir

    ReplyDelete
  5. Pgtrb second list viduvathuthan best intha situation la

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி