பள்ளிகள் திறப்பு - இரண்டாவது கொரோனா அலை வீசுமோ என்ற அச்சத்தில் பெற்றோர், மாணவர்கள் கலக்கம்! - kalviseithi

Nov 3, 2020

பள்ளிகள் திறப்பு - இரண்டாவது கொரோனா அலை வீசுமோ என்ற அச்சத்தில் பெற்றோர், மாணவர்கள் கலக்கம்!

 நாளிதழ் செய்தி :


தமிழகத்தில், நவ., 16ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால், இரண்டாவது கொரோனா அலை வீசுமோ என்ற அச்சத்தில் பெற்றோர், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


பள்ளி திறப்பை இன்னும் சில மாதங்கள் தள்ளி வைப்பதே நல்லது.தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2, கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தீபாவளிக்கு பின் திறக்கப்பட உள்ளன. உலக சுகாதார மையம், இரண்டாவது கொரோனா பேரலை வீசும் என எச்சரித்துள்ள இந்த நேரத்தில், பள்ளிகள் திறப்பது பற்றி, அரசு முடிவு செய்துள்ளது. இந்த சமயத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கும். குளிரும் வாட்டி வதைக்கும். ஜலதோஷம், காய்ச்சல் உட்பட பருவ கால நோய்கள் தலைதுாக்கும். பண்டிகை காலம் என்பதால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 


வயிறு உபாதைகளும், சுவாசப் பிரச்னைகளும் ஏற்படும். இதுபோன்ற சூழல், கொரோனா வேகமாக பரவ வழிவகுக்கும். வழக்கமான ப்ளூ காய்ச்சலுடன், கொரோனாவும் சேரும் போது, மருத்துவ பணியாளர்களுக்கு சுமை அதிகரிக்கும்.இந்தியாவில், டில்லி, பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா வில், பனிக்காலத்தில் கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த நிலை, பள்ளி திறப்பால், தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது. வகுப்பறைவகுப்பறையில், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், உடல் வெப்பநிலை பரிசோதனை, எப்போதும் முக கவசம் அணிந்திருத்தல், புத்தகம். 


பேனா, பென்சில், தண்ணீர் பாட்டிலை பகிர்ந்து கொள்ளக் கூடாது என, நிறைய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், இவற்றை, எல்லா நேரங்களிலும் பின்பற்றுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.இதனால், மாணவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மட்டுமே திறக்கப்படுகிறது என்று காரணம் சொன்னாலும், இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைந்தபட்சம் ஒரு பள்ளியில், 600 வரை இருக்கும்.அரசு சுக, துக்க நிகழ்வுக்கு, 100 பேர் வரை மட்டுமே ஓரிடத்தில் கூட அனுமதிக்கிறது. ஆனால், பள்ளிகளில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் கூடலாமா? மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், பெரிய அளவில் தாக்காது என நினைத்தாலும், அவர்கள் மூலம் வீட்டில் உள்ள பெற்றோரை எளிதாக தாக்க வாய்ப்பு உண்டு.தொற்று சங்கிலிஇப்படி தொற்றுச்சங்கிலி தொடர்ந்து, இரண்டாவது கொரோனா அலை வீசினால், தமிழகம் தாங்காது. ஏனெனில், இன்னொரு ஊரடங்கு, பொது முடக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.இன்னொரு ஊரடங்கை தவிர்ப்பதற்காகவாவது, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம். ஏற்கனவே, கொரோனா நோயாளிகளுக்கு பல மாதங்களாக சிகிச்சை அளித்து, நம் மருத்துவ பணியாளர்கள் சோர்ந்து போயுள்ளனர்.இவர்களால், இரண்டாவது கொரோனா பேரலையை சமாளிக்க இயலாது என்பதையும் கவனிக்க வேண்டும். இனி கொரோனா வந்தால் உயிர்ப்பலி அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருப்பதை மறந்து விடக்கூடாது.தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள், மழைக்காலம், குளிர் பாதிப்புகளை தமிழகம் பாதுகாப்பாக கடக்கட்டும். கொரோனா பரவலும் முற்றிலுமாக குறையட்டும். பின், உயிர் காக்கும் மருத்துவர்கள், சுகாதார துறையினரின் ஆலோசனையை கேட்டு, 2021 ஜனவரியில் பள்ளிகளை திறப்பதே, நல்ல முடிவாக இருக்கும். கல்லுாரிகளை பொறுத்தவரை, பண்டிகை காலங்கள் முடிந்து, டிசம்பர் துவக்கத்தில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திறக்கலாம்.பரவும் வாய்ப்பு அதிகம்கொரோனா சூழலில் பள்ளிகளை திறந்த பிரிட்டன், இஸ்ரேல், தென்கொரியா, வியட்நாமில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி, உலக சுகாதார மைய ஆய்வின் முக்கிய அம்சங்கள். துவக்க பள்ளிகளை விட, உயர்/ மேல்நிலை பள்ளிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டது 10 - 14 வயதினரை ஒப்பிடும் போது, 9 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தொற்று வாய்ப்பு மிக குறைவு ஆசிரியரிடம் இருந்து ஆசிரியருக்கு பரவியது அதிகம். ஆசிரியரிடம் இருந்து மாணவர்களுக்கு பரவியது குறைவாக இருந்தது.


அமெரிக்காவில் எப்படி?


அமெரிக்காவில், ஆகஸ்டில் கல்லுாரி திறக்கப் பட்டது. துவக்கத்தில், ஒரே நாளில், 10 என துவங்கிய பாதிப்பு, 100க்கு மேல் உயர்ந்தது. செப்டம்பரில் நியூயார்க் டைம்ஸ் சர்வே படி, அமெரிக்க பல்கலை, கல்லுாரிகளில் கொரோனா பாதிப்பு, 36 ஆயிரமாக உயர்ந்தது. நியூயார்க் பல்கலை, இலினாய்ஸ் பல்கலை, கலிபோர்னியா பல்கலை உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதிப்பு அதிகரித்தது. 'தடுப்பூசி வரும் வரை, ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டியிருக்கும்' என, கலிபோர்னியா பல்கலை தலைவர் ஹட்சின்சன் தெரிவித்து உள்ளார்.பள்ளி கட்டணம் செலுத்துங்கள்'ஆன்லைன்' மூலம் தனியார் பள்ளிகள், சிறப்பாக வகுப்புகளை எடுக்கின்றனர். எனினும் பள்ளிகள் திறக்கவில்லை என்ற காரணம் காட்டி, கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர் சிலர் தயங்குகின்றனர்.


நீதிமன்றம் தலையிட்ட பின், 40 சதவீத கல்விக் கட்டணத்தை பள்ளிகள் வசூலித்த போதும், அதை செலுத்தவும் பெற்றோர் தயங்குகின்றனர்.தற்போது, பள்ளிகள் திறக்கவில்லை என்றாலும் மீதிக் கட்டணத்தில், 30 சதவீதத்தையாவது பெற்றோர் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் தான், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் பெற இயலும்.அரசு பள்ளிகளிலும், ஆன்லைன் வகுப்புகளை ஊக்கப்படுத்தலாம். தற்போது நடக்கும் தொலைகாட்சி வகுப்புகள், அனைத்து மாணவர்களையும் பரவலாக சென்றடையவும், அரசு யோசிக்க வேண்டும்.

6 comments:

 1. https://youtu.be/uNw3R6sLpj4
  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான முடிவு எப்படி இருக்கும்?

  ReplyDelete
 2. Open the school with proper way.
  Education deportment must show the success.

  ReplyDelete
 3. Education department eppoduma kulapam than,idu yenna pudusa,ethana go,aalosanai?waste

  ReplyDelete
 4. Open for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கோரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam

  ReplyDelete
 5. ஆசிரியர் பெருமக்களே கடந்து 9மாதங்களாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா பள்ளிகள் திறந்து மானவர்களுக்கு கல்வி கற்ப்பிக்கும் என்னம் இல்லையா தயவு செய்து பள்ளிகள் திறப்பதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி