5.18 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வரலாற்று சாதனை: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் - kalviseithi

Nov 7, 2020

5.18 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வரலாற்று சாதனை: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

 


தமிழகத்தில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன்  கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழ்நாட்டின் வரலாற்றில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள சாதனை, நம்முடைய முதல்வர் காலத்தில் நடந்துள்ளது. இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று.

சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத் திட்டத்தைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதை மக்கள் பாராட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 80 ஆயிரம் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் போர்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.

பள்ளிகள் திறப்புக் குறித்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். பெற்றோரின் கருத்துகள் வந்தபிறகுபள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்.

34 comments:

 1. 7.5 ./. Super sir heartly welcome

  ReplyDelete
 2. Replies
  1. No they won't. Surplus iruku so equalise aairchunu solirvanunga

   Delete
 3. Sir please pg trb calfor pannunga

  ReplyDelete
  Replies
  1. Thank you Sk neenga padikadhinga

   Delete
  2. கல்விச்செய்திக்கு பெருமையே செங்கோட்டையன் தான். போஸடிங் போடுடா. வாய்ச் சவடாலை நிறுத்தி விட்டு

   Delete
  3. நிர்மலாமேடம் இலவுகாத்த கிளி போல தான் ௨ங்க கனவு

   Delete
  4. Madam already p.g.assisst 2019 chemistry ku case mudiyuma posting podala. Next year April last election varuthu but exam Feb monthkula vaaigaa time erukkathu athanal call for varathukku vaaipu kuraivu. So Definitely election mudincha piragu call varum nambi padinga. Okk.

   Delete
  5. January or february month definately calfer for PG TRB so you confident and continue to start study

   Pending TRB, TNPSC posting cleared to december month so january month all of you ready to TRB

   Delete
  6. Thank you so much madasami sir

   Delete
  7. Electionla vote vanga kandipa pg trb exam vaipanga wait for u

   Delete
  8. கனவு காணுங்கள்

   Delete
 4. 10 lakhs students admission ana kuda teachers ku appoinment poda matinga idula vera unaku perumai vera sekirama veetuku poi sera parunga podum unga nirvagam thanga mudiyala

  ReplyDelete
 5. Part time teachers life 10 year achi sir yedhachum help panuga sir

  ReplyDelete
 6. நண்பர்களே... இரண்டு முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தவன்.. இந்த முறை அதிக மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.. அதனால் அவர்களின் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்
  என்ற என்னத்திலூம் நம்பிக்கையிலும் படித்தது வருகிறேன்..கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.

  ReplyDelete
  Replies
  1. Very good sir but comments podravanga trb varadhunu easya solranga, neenga padinga All the best

   Delete
 7. Replies
  1. Poda matanunga. Surplus irunthanala poda mudiyathunu last time la solli kaala vaari vitruvanunga

   Delete
 8. Part time teachers..😀😀😀😀😀

  ReplyDelete
 9. https://youtu.be/98iVZb0GfXc
  ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 2021 நல்ல ஆண்டாக அமையுமா

  ReplyDelete
  Replies
  1. Kandipa amaiyathu. Surplus vechu fill panirvanga.

   Delete
  2. உனக்கு உண்மையாகவே ரொம்ப நல்ல எண்ணம் இருக்கிறது. கண்டிப்பாக 2021ல் 100% ஆசிரியர் பணிநியமனம் செய்வார்கள்.

   Delete
  3. உனக்கு உண்மையாகவே ரொம்ப கெட்ட எண்ணம் இருக்கிறது என்று கண்டிப்பாகதெரியவில்லை. 2021ல் 100% ஆசிரியர் பணிநியமனம் செய்வார்கள்.

   Delete
 10. Sk sir Pg second list vara vaippu irrukka

  ReplyDelete
 11. Part time teachers conform pannuga ..unmaiya irrukom ....nalldhu pannuvom...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி