மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின - kalviseithi

Nov 20, 2020

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின

 


மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் 313 எம்பிபிஎஸ் மற்றும் 45 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், 2020 - 21-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக, அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள 313 எம்பிபிஎஸ், 92 பிடிஎஸ் என 405 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


முதல் நாளில், 235 பேர் மருத்துவ இடங்களை பெற்றனர். இதற்கிடையே, 2-வது நாளான நேற்றைய கலந்தாய்வில் 374 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 303 மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். 71 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

கலந்தாய்வுக்கு வந்தவர்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 3 பேரும், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வந்த எம்பிபிஎஸ் இடங்களை 82 பேரும் பெற்றனர்.

அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 5 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 33 என மொத்தம் 123 மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். 180 மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்காமல் காத்

திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5 உள் ஒதுக்கீட்டில் உள்ள 227 எம்பிபிஎஸ், 12 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் வந்த 86 எம்பிபிஎஸ், 33 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்பில் சேர பலர் ஆர்வம் காட்டவில்லை. அதனால், 47 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

இன்றும் உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் 47 பிடிஎஸ் இடங்கள் நிரம்பக் கூடும் என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. சுயநிதி மருத்துவக் கல்லூரி இடம் கிடைத்தவர்கள் வருடம் குறைந்த பட்சம் ஆறு இலட்சம் ரூபாய் செலவு ஆகலாம். இதற்கு ஏதேனும் உதவிகள் கிடைக்குமா.
    தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிவிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி