7.5% ஒதுக்கீடு - ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2020

7.5% ஒதுக்கீடு - ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது.

மருத் துவ கல்வியில் 7.5 சத வீத உள் இடஒதுக்கீடு 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் முழுமையாக படித்த மாணவர்களுக்குத்தான் , ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது . தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே பள்ளிஓடவயல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் , ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : என் மகள் அறிவிகா . நாவக்கொல்லையி லுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்தார் . அங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் , புனவாச லில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் 6 ம் வகுப்பு படித்தார் . பின்னர் பேராவூரணியில் உள்ள  அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார் . 10 ம் வகுப்பில் 467 மதிப் பெண் பெற்று தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றார் . பிளஸ் 2 வில் 453 மதிப்பெண் பெற்றுள்ளார் . மருத் துவராக வேண்டும் என்ற லட்சியத்தால் நீட் தேர்வில் பங்கேற்றார் . இதில் 270 மதிப்பெண் பெற்றார் . ) தற்போது அரசுப் பள்ளி மாணவர்க களுக் கான 7.5 சதவீத உள் ட ஒதுக்கீட்டின்படி என் மகளுக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள் இதில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட் டுமே உள் இடஒதுக்கீடு பொருந்தும் என கூறப் பட்டுள்ளது . ஆனால் , எம் வகுப்பு மட்டும் அரசு உதவி பெறும் பள் ளியில் படித்துள்ளதால் , சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது . எனவே , என் மகள் 6 ம் வகுப்பு படிப்பை யும் அரசுப் பள்ளியில் படித்ததாக கருதி , மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவ ரிசைப்பட்டியலில் என் மகளின் பெயரை சேர்க்கவும் , அவருக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தர விட வேண்டும் . ) இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை நீதிய திகள் என்.கிருபாகரன் ,

பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர் . அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி , 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை முழுமையாக அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட் டுமே உள் இட ஒதுக் கீடு வழங்க முடியும் , மனுதாரரின் மகள் எம் வகுப்பை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளார் . எனவே , அவர் உள்இட ஒதுக் கீடு சலுகையை கோர முடியாது ” என்றார் . இதையடுத்து நீதிபதிகள் , அரசா ணைப்படி , 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என் பது முழுமையாக அர சுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கானது . இதை மனுதாரர் உரிமை கோரமுடியாது . எனவே , இந்த மனு தள் ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள் ளனர் .




4 comments:

  1. Very good. வரவேற்கத்தக்கது... ஏன் அரசு பள்ளியை விட்டு விட்டு மற்ற பள்ளிகளுக்கு செல்கிறீர்கள்...

    ReplyDelete
  2. It is unfortunate for that girl. Sir in many villages just because aided school s are govt didn't open schools. I can name many such villages.

    ReplyDelete
  3. i preferred aided school over govt for my schooling bcoz of lack of teachers those days. govt should give reservation for aided school students separately. atleast 2.5%

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி