தேசியக் கல்வி நாள் இன்று: இந்திய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

தேசியக் கல்வி நாள் இன்று: இந்திய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்

 


நாடு முழுவதும் இன்று (நவம்பர் 11) தேசியக் கல்வி நாள்  கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் அபுல் கலாம் ஆசாத்.

இவரது தலைமையின் கீழ் 1951-ல் முதன்முதலாக ஐஐடி கல்வி நிறுவனம் காரக்பூரில் தொடங்கப்பட்டது. 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஏஐசிடிஇ தொடங்கப்பட்டது. இதுதவிர சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத் நாடக அகாடமி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தொடங்கப்பட, அபுல் கலாம் ஆசாத் காரணமாக இருந்தார். 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகவும் போற்றப்பட்டார்.


கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், தேசியக் கல்வி நாளாகக் கடந்த 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. முதல் தேசியக் கல்வி நாளை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் டெல்லியில் கொண்டாடினார்.

அபுல் கலாம் ஆசாத்தின் மறைவுக்குப் பிறகு 1992இல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி