அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது எப்போது ? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2020

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது எப்போது ? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

 


பத்தாம் வகுப்பு, 11,  12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 ஊராட்சிகளில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கி

வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில்தான் முதல்முறையாக எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எளிமையாகி உள்ளது. 405 மாணவர்களில் 313 பேர் பொது மருத்துவத்திலும், 92 பேர் பல் மருத்துவத்திலும் சேர வாய்ப்புள்ளது.

ஐஐடி பயிற்சி நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை தில்லியில் இருந்து தமிழகம் வரும் குழுவுடன் ஆலோசனை நடத்தி, பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும். அரசு நடத்தும் பட்டயக் கணக்காளர் பயிற்சி வகுப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு 11-ஆம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

13 comments:

  1. Pls 🥺 part time teachers ku help panuga

    ReplyDelete
    Replies
    1. Part time teachers ஆல் நீ அதிகமா பாதிக்கப்பட்டிருப்ப போல😁😁😁😁😁

      Delete
  2. Ama pavam part time teachers mudija IPS IAS Posting kuduga pavam avaga

    ReplyDelete
  3. When release forest guard exam list 1:3 ??.

    ReplyDelete
  4. ஏன் நீங்கள் அமெரிக்கா அரசில் அல்லது ஆப்பிரிக்க அரசில் மந்திரியாக உள்ளீர்களா?. அல்லது தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் இவர்தான் என்பதை மறந்து விட்டாரா?

    ReplyDelete
  5. Part time teachers pathi yarachum pesuga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி