தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் வலியுறுத்தல். - kalviseithi

Nov 10, 2020

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் வலியுறுத்தல்.


 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவலின் 2ம் சுற்று ஆபத்து இருப்பதால், பள்ளிகளை திறக்க கூடாது என கூறினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

, செங்கல்பட்டு கல்வி மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அசோகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குகானந்தம், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து. இதில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அப்போது சிலர் ‘‘வீட்டில் பிள்ளைகளின் தொல்லை தாங்கவில்லை, இதனால் பள்ளியை உடனே திறக்க வேண்டும். எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருக்கின்றனர்’’ என கூறினர். ஒரு சில பெற்றோர்கள், ‘‘தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலம் முடிந்து மார்கழி குளிர் வர உள்ளது. அப்போது கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரிக்கும். இதற்கு அரசும், பள்ளி நிர்வாகமும் என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அதை மாணவர்கள் முறையாக பின்பற்றுவார்கள் என கண்காணிக்க முடியாது.

இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும், எனவே, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்’’ என்றனர். அதேபோல் திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 171 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர். இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் இருந்து அரசு சார்பில் வழங்கப்பட்ட கருத்து கேட்பு படிவம் பூர்த்தி செய்து பெற்று, அவை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டது.



23 comments:

 1. எப்படி ஆனி முடிஞ்சி ஆடி முடிஞ்சி ஆவணி வந்தா எல்லாம் சரியாயிறும் மாறியா

  ReplyDelete
 2. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடத்திய கருத்து கணிப்பு முடிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது.

  ReplyDelete
 3. Fake News. Debavali, pongal, New year engalukku venam.

  ReplyDelete
 4. This website always fake news only tel.i hate this website.gud bye.always irritating news only publish.ful of fake news only

  ReplyDelete
 5. PG-TRB CHEMISTRY
  KRISHNAGIRI

  Online classes

  Admission going on...

  Fully Short cut Methods
  Complete syllabus study Materials
  Chapterwise Q & A
  Online Live doubt clearness sessions
  Hand Written Materials
  100% result Oriented teaching

  Study Material available

  What's App
  9489147969

  ReplyDelete
 6. கொளுத்தி போடு Admin குமாரு.......
  பெற்றோர் Phone number எல்லாம் போடுற? ?????? 😁😁😁😁😁😁

  ReplyDelete
 7. கல்விச்செய்தி நண்பரே... உங்களின் மீது கொஞ்சம் மரியாதை வைத்து இருக்கிறேன்..உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடவும்.. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும். அதனால் பெற்றோர்கள் யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வேலைக்கு சென்று வருவதால் கொரோனா தொற்று வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் பரவக்கூடும்... அதனால் புத்தாண்டு பிறந்தவுடன் வேலைக்கு செல்லவும் பெற்றோர்களே...

  ReplyDelete
 8. நான் பணிபுரியும் பள்ளியில் 80% பெற்றாேர் பள்ளி திறக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் தெரிவித்தனர்

  ReplyDelete
 9. நான் பணிபுரியும் பள்ளியில் 80% பெற்றாேர் பள்ளி திறக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் தெரிவித்தனர்

  ReplyDelete
 10. 2021 la may month election mudincha piraku reopen pannunga.

  ReplyDelete
 11. அவருக்குள்ள வருடமே போயிருப்பது.
  அதுக்கப்ரம் பள்ளி திறந்தால் என்ன திறக்காட்டீ என்ன.

  ReplyDelete
  Replies
  1. அதுக்குள்ள வருடமே போயிரும்.
   அதுக்கப்ரம் பள்ளி திறந்தால் என்ன திறக்காட்டீ என்ன.

   Delete
 12. பள்ளிகூடம் தடைசெய்யபட்டது என அறிவிப்பு போட்டாலும் ஆச்சரியமில்லை

  ReplyDelete
 13. Please close schools, better you can stop school because Corona will attack , you can stop salary of teachers too, it will helpful for the election, udanae varuvan paaru, venamnu sonna v..kenn, plz don't want school , teachers, bs computer , phone is there ,instead of paying salary to the teachers give mobile phone each and recharge , cheap and best

  ReplyDelete
 14. முகமது பின் துக்ளக்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி