இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. - kalviseithi

Nov 10, 2020

இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

 


இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு நடத்தப்படும் மறுதேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாகத் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தன. தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இணையவழித் தேர்வின் இடையே ஏற்பட்ட மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வைச் சில மாணவர்கள் எழுதவில்லை. அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம்  அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் மறுதேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கும் நவ.17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு படிப்புக்கான தேர்வு அட்டவணையை அறிய: 

https://aucoe.annauniv.edu/ttam20finalsempdf/timetableindex.html


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி