BE - துணை கலந்தாய்வு அறிவிக்கை இன்று வெளியீடு! - kalviseithi

Nov 3, 2020

BE - துணை கலந்தாய்வு அறிவிக்கை இன்று வெளியீடு!

 

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு,  துணை கலந்தாய்வு அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது. 


சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதி வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். 


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,  பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் துணைக் கலந்தாய்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். 


செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள துணைக் கலந்தாய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து,  மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக நவ.3- ஆம் தேதி முதல் நவ.7- ஆம் தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி