கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே பெற்றோர்களிடம் கையெழுத்து: பள்ளிகளை திறக்க நிர்வாகங்கள் நடத்திய ரகசிய நாடகம் அம்பலம் - kalviseithi

Nov 9, 2020

கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே பெற்றோர்களிடம் கையெழுத்து: பள்ளிகளை திறக்க நிர்வாகங்கள் நடத்திய ரகசிய நாடகம் அம்பலம்

 


பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே பள்ளிகளை திறக்க கோரி பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது வைரஸ் தொற்று குறைய தொடங்கியுள்ளதால் வரும் 16-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

1 comment:

 1. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
  பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
  பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
  அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
  இப்படிக்கு
  வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி