கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும்வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2020

கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும்வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்

 


கொரோனா வைரசின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை இந்த கல்வி ஆண்டில் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும். பாடத்திட்டங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக எளிதில் புரியும் வகையில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்றார்.


மேலும், கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மாணவ, மாணவியர்கள் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக சிக்கல்களுக்கு ஆளாவதை தவிர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தனி குழு அமைக்கப்பட்டது. அனைத்து பல்கலைக் கழகங்களுடன் கலந்தாலோசித்து அதன் அடிப்படையிலேயே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. எனினும், இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதற்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.

4 comments:

  1. ஆசிரியர் இல்லாமல் எப்படி ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார்கள். ஆறாயிரம் ஆசிரியர்கக்கு வெறும் 900 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

    ReplyDelete
  2. ஆசிரியர் இல்லாமல் எப்படி ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார்கள். ஆறாயிரம் ஆசிரியர்கக்கு வெறும் 900 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

    ReplyDelete
  3. Part time teachers 10315 Peru irrukom boss's...

    ReplyDelete
  4. தனியார் கல்லூரிகள் சில மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்..ஆனால் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் தருவதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி