அரசு உதவி பெறும் பள்ளியில் படிப்போருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2020

அரசு உதவி பெறும் பள்ளியில் படிப்போருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 


அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சேர்ந்த துர்காதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகாசி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 முடித்தேன். தற்போது அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 


எனது குடும்பம் ஏழ்மையானது. அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும். எனவே, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள்இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்யவும், இந்த அரசாணையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கும் விரிவுபடுத்தவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

9 comments:

 1. மிகவும் ஏழ்மை என்று சொல்கிறார்,அப்பறம் எப்படி அரசு நிதிஉதவி பள்ளியில் ஆண்டுக்கு 3000 கட்டி படிக்கிறாய், அரசு பள்ளியில் படித்து இருந்தால் நீ ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டிது இல்லை,புத்தகம், சீருடை, கணினி, மிதிவண்டி, கல்வி உதவிதொகை என்று 28 பொருட்கள் கொடுத்து, மருத்துவ படிப்பும் கிடைத்து இருக்கும், பண திமிரு பத்திய, அரசு பள்ளிக்கு கொடுத்து 7.5% மருத்துவ இட ஒதுக்கீடை ரத்து செய் என்று கூறுகிறாய், இதுல இருந்து நீ யார் என்று தெரிகிறது, எனக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேள், அது உனது உரிமை, அதை செய்வதை விட்டுட்டு அரசு பள்ளி மாணவ மாணவிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று சொல்வதற்கு உனக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. கொடுத்திருக்கிற statement ஐ ஒழுங்கா படிடா பரதேசி

   Delete
  2. அடிமை நாய், தாளாளர்க்கு விளக்கு பிடிக்கற நாய், நீ முதலில் statement படிடா,

   Delete
 2. அரசு உதவி பெறும் பள்ளியை சேர்த்தால் அரசுப்பள்ளிக்கு சீட் குறையும்.
  உதவி பெறும் பள்ளி என்பது தனியார் பள்ளி போல் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. போய் பார்த்து விட்டு சொல்லவும்.

   Delete
 3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிட்டத்தட்ட தனியார் பள்ளி மாணவர்கள் போல தான். கண்டிப்பாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவே கூடாது....

  ReplyDelete
 4. தரவே கூடாது அதுதான் சரி

  ReplyDelete
 5. நீ யாருன்னு முதலில் முகத்தை காட்டு நண்பா

  ReplyDelete
 6. 2.5 % reservation may be given to aided school students also. coz most of the aided school students also like govt school students. they are also not exposed to greater education strategies followed by metric/cbse students. few places have aided schools very closer to govt schools, so people choose aided schools over govt. aided schools never collect more fees like private and never teach like metric also. dont compare aided and private schools. reservation must be given but against govt school reservation they should not talk.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி