அரியர் மாணவர்கள் தேர்ச்சி: பல்கலைக்கு எதிராக வழக்கு - kalviseithi

Nov 6, 2020

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: பல்கலைக்கு எதிராக வழக்கு இளநிலை முதுநிலை பட்டப்படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: தேர்வு எழுதாமலேயே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆகியவை அறிவித்துள்ளன.இது தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்திய மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பல்கலை மானிய குழுவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்நிலையில் தமிழக அரசு ஆணைப்படி அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக பல்கலை அறிவித்தது சட்டவிரோதம். அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

3 comments:

  1. https://youtu.be/Am1HCNMD5lA
    தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி