"அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு" - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Nov 5, 2020

"அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு" - அமைச்சர் செங்கோட்டையன்

 


அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆய்வுசெய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், தமிழக அரசு


ஆந்திராவையோ, கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை எனவும், மாணவர்களையும், பெற்றோர்களையும் கவனிக்கின்ற அரசு என்ற முறையில் பள்ளிக்கள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவுசெய்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து, பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


மேலும், மாணவர்களின் நலன்கருதி பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் தான் முழுமையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகவும் கொடுக்கலாம் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவங்கிய நீட்தேர்வு பயிற்சியில் 15 ஆயிரத்து 492 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளதாகவும், இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


மேலும், அடுத்தாண்டு பொதுத் தேர்வுகளை ரத்துசெய்வது குறித்து, துறையின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுதேர்வுகள் எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வுசெய்வார் என்று தெரிவித்தார்..

16 comments:

 1. பாடத்தின் முதல் தலைப்பு என்ன என்பதை கூட அறியாத மானவர்கள் எப்படி பொது தோர்வை எதிர் கொள்ள போகிறார்கள்.

  ReplyDelete
 2. பள்ளிகளைத் திறக்கக் கூடாது எனக்கூவும்..

  சமூக ஆர்வலர்களே.. கல்வியாளர்களே.. அரசியல் கட்சிகளே..

  பள்ளி , கல்லூரிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு கருதி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்தீர்களா?

  கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகில் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்தீர்களா?

  பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சி மட்டும் வேண்டும் என நினைக்கிறீர்களா?

  பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யாரேனும் கவலைப் பட்டீர்களா..?

  ஏழு மாதமாக சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலை கொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள்..??

  பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோனா பரவாது. விழிப்புணர்வு அதிகம் உள்ள பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா..?

  அருமை சமூக ஆர்வலர்களே சற்று கவனியுங்கள்..

  தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாதச் சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என போராடுங்களேன்..

  நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.

  இப்படிக்கு
  வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்களுக்காக..

  தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சார்

   Delete
  2. சூப்பர் சார்,

   Delete
  3. சூப்பர் சார்,

   Delete
  4. Super sir. Stalin ku puriyathu.

   Delete
  5. உயிரோட்டமான கருத்துக்கள் நண்பரே😢😢

   Delete
  6. 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

   Delete
  7. வித்தியாசமான எண்ண ஓட்டம் உள்ள மனிதர்கள் மற்றும் அரசு.சமநோக்கு பார்வை இல்லாத மனங்கள். கொரானா ஒருபுறம் சுகபோகம் ஒருபுறம் மரண வலி புரிந்து செயல்படாத அரசு நிர்வாகம் மற்றும் நீதிமன்றம்

   Delete
 3. உயிரோட்டமான கருத்துக்கள் நண்பரே😥

  ReplyDelete
 4. No please school reopen on 2021

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி