Breaking Now : சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2020

Breaking Now : சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்!



 அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா டுடே பத்திரிகையின், இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் & விருதுகள் 2020 நாளை நடைபெற இருந்த நிலையில் இயற்கை இடையூறுகள் காரணமாக இந்த நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து முதல்வர் பழனிசாமிக்கு டிசம்பர் 5ல் இந்தியா டுடே விருது வழங்குகிறது . இதில் இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.


அதேப்போல் 6 முதல் 10 வரையிலான இடங்களை, ஹரியானா ,ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா ,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து தக்க வைத்துள்ளன. 11 முதல் 20 வரையிலான இடங்களை கர்நாடகா, உத்தரகண்ட்,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர்,ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், அசாம், பீகார் ஆகிய மாநிலங்கள் வரிசையாக பிடித்துள்ளன. இந்திய டுடே வெளியிட்டு வரும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3 -வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதே போன்று பீகார் மாநிலம் தொடர்ந்து 3வது முறையாக 20வது இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது

4 comments:

  1. அடிச்ச கைப்புள்ள‌க்கே இவ்வ‌ள‌வு காய‌ம்னா அடிவாங்குன‌வ‌ன் உயிரோட‌ இருப்பானு நினைக்குறே?!...

    ReplyDelete
  2. கைப்புண்ணுக்கு க‌ண்ணாடி தேவையா?...
    ஒருவேளை இது உண்மையாக‌ இருக்குமேயானால் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளின் கீழ் நிலையை எண்ணி வ‌ருந்துகிறேன்...
    ஆந்திரா,கேர‌ளா,ப‌ஞ்சாப்,ஒடிசா,மேற்கு வ‌ங்காள‌ம் ஆகிய‌வையே முன்ன‌ணி மாநில‌ங்க‌ள் என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து...

    ReplyDelete
  3. Elaction tamilnadula varapokuthu athanala first manilam centralla pakisthanodu vetikuntu entha paruppu tamilnadula vekathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி