CA படிப்புக்கு ஆன்லைன் பயிற்சி பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2020

CA படிப்புக்கு ஆன்லைன் பயிற்சி பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு

 


சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவு, ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்பும் அரசு பள்ளி மாணவ -மாணவியர், பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவில் சேர, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக, ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. டிச., 23 ல் துவங்கி, தினமும் காலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை, 5:30 மணியிலிருந்து, 8:30 மணி வரையும் பயிற்சி வழங்கப்படுகிறது. தினமும் ஐந்து மணி நேரம் வீதம், ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. 


இதற்கு கட்டணமாக, 9,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும், மாணவர்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதற்கான அறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை, அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி