CBSE - 10, 12-ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2020

CBSE - 10, 12-ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

 


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணையவழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே பள்ளிகள் திறப்பை உறுதிசெய்ய முடியாத நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதேநேரம் 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரி வித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி கூறியதாவது: 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும். அதற்கான தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்வு நடைமுறைமாற்றங்கள் குறித்த திட்டமிடல்தற்போது நடைபெற்று வருகின்றன. அவை இறுதியானதும் அதன் விவரங்களை வெளியிடுவோம்.

தற்போதைய கரோனா சூழலை சிபிஎஸ்இ பள்ளிகளும், ஆசிரியர்களும் திறம்பட கையாண்டனர். மேலும், தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இணையவழியிலான கற்பித்தலில் பல்வேறுபுதிய யுக்திகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர். அதன்மூலம் மாணவர்கள் கற்றல் பணி பாதிக்காதபடி கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு நடைமுறைமாற்றங்கள் குறித்த திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது. அவை இறுதியானதும் அதன் விவரங்கள் வெளியிடப்படும்.

4 comments:

  1. How come you can tell nothing was affected for students. You study for nine years in offline and one year in online and face the board exam. Then you talk.

    ReplyDelete
  2. When govt asked interest for our loans during moratorium period we elders went to court and got justice. Who will get the justice for children. If a child put a case in the that I could not learn mathematics in online teaching, you have closed the school and you are asking us to write the exam. How is it possible for me. The same question was asked by us for moratorium

    ReplyDelete
  3. How many students were enquired about online classes before telling they are comfortable with this

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி