Flash News : பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

Flash News : பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு.

 


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான  மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர்.

தமிழக அரசின் பள்ளி  திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும். 9,10,11,12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம். 

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் கடிதம் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.






4 comments:

  1. முதலில் கிராமப்புறங்களில் உள்ள 9முதல்12வரை உள்ள மேல்நிலைப் பள்ளிகளை துவங்கலாம் அதுவே சரியாக இருக்கும் ஏனேனில் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகள் திறக்க பல நாள்கள் ஆகும் என சென்னை திருப்பூர் போன்ற இடங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர் இதே நிலை நீடித்தால் கிராமப்புற மாணவர்கள் பள்ளியே மறந்து விடுவார்கள்...அரசே....

    ReplyDelete
  2. முதலில் கிராமப்புறங்களில் உள்ள 9முதல்12வரை உள்ள மேல்நிலைப் பள்ளிகளை துவங்கலாம் அதுவே சரியாக இருக்கும் ஏனேனில் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகள் திறக்க பல நாள்கள் ஆகும் என சென்னை திருப்பூர் போன்ற இடங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர் இதே நிலை நீடித்தால் கிராமப்புற மாணவர்கள் பள்ளியே மறந்து விடுவார்கள்...அரசே....

    ReplyDelete
  3. 10.11.12 பள்ளி திறக்கலாம்.

    ReplyDelete
  4. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத வரை அனைத்துப் பள்ளிகளையும் திறக்கலாம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் கண்டிப்பாக200 பேர் படிக்கும் பள்ளியில் குறைந்தது 20 பேருக்காவது தொற்று கண்டறியப்படும் ஏனெனில் தற்போது பல இடங்களில் அறிகுறி இல்லாமல் வைரஸ் பரவி வருகிறது பின்னர் பல மாதங்கள் பள்ளி திறப்பு தள்ளி வைக்கும் சூழ்நிலை ஏற்படலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி