NEET - தேர்வுக்கு ebox மூலமாக இன்று முதல் இலவச பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

NEET - தேர்வுக்கு ebox மூலமாக இன்று முதல் இலவச பயிற்சி!

 


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு 2017-ம்ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகநீட் பயிற்சியில் பங்கேற்க 15,492மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுபயிற்சி வகுப்புகள் ஆன்லைனில்இன்று (நவ.9) முதல் தொடங்குகிறது. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி நடப்பு கல்விஆண்டுக்கான (2020-21) நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரைவழங்கப்படும். ஒவ்வொரு வாரஇறுதியிலும் ஆன்லைனில் குறுந்தேர்வுகள் நடத்தப்படும். மேலும், கல்வித் தொலைக்காட்சியிலும் நீட் பயிற்சி பாடங்கள் ஒளிபரப்புசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. 2021-2022 ஆம் ஆண்டு நீட் பயிற்ச்சி வகுப்பு இன்னும் 9:11:2021 ஆகியும் பயிற்ச்சி தொடங்காத காரணம் என்ன என்பதை கூற வேண்டும் ஐயா !

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி