பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்ட தனியார் பள்ளிகளின் நிர்ப்பந்தம் காரணமா?- விருப்பம் உள்ள மாணவர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலனை - kalviseithi

Nov 9, 2020

பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்ட தனியார் பள்ளிகளின் நிர்ப்பந்தம் காரணமா?- விருப்பம் உள்ள மாணவர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலனை

 


பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்டுவதற்கு, தனியார் பள்ளிகள் அழுத்தம் தருவதே காரணம் என்று கூறப்படுகிறது.

கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்ததால், பெற்றோரின் கருத்துகளை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று (நவ.9) நடைபெறுகிறது.

இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தம் காரணமாகவே பள்ளிகள் திறப்பில் முனைப்பு காட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆரம்பம் முதலே நோய்த் தொற்றின் தீவிரம் பற்றிய கவலை இல்லாமல், வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் தீவிரம்காட்டிவருகின்றன. இதற்காக பல்வேறு வழிகளில் கல்வித் துறைக்கும், அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் தருகின்றன.

அதன் விளைவாகவே, அக்டோபரில் பள்ளிகளை திறக்க அரசுமுன்வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து, கல்வி ஆண்டு தாமதமாவது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவானது.

இந்நிலையில் கரோனா 2-வது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து, இம்மாத இறுதியில் நோயின் தீவிரத்தை அறிந்து, அதற்கேற்ப முடிவெடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பெற்றோரின் விருப்பத்தை அறிவதும் அவசியம் என்பதால், கருத்துக் கேட்பு கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்தது. இது தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பின்போது, பள்ளிகளை திறக்க பல பெற்றோர் வலியுறுத்துவதாக 80 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்தன. அதேபோல, தற்போது நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகவே மாற்றிக்கொள்ளும்.

பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்கின்றன. இதனால், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதுநோய்ப் பரவலுக்கு வழிவகுத்துவிடும். தவிர, அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 50 வயதை தாண்டியவர்கள். 40 வயதை கடந்தவர்களும்கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

12 comments:

  1. https://studyneettn.blogspot.com

    ReplyDelete
  2. ேபருந்தில் ெகா ரோனாவராதா

    ReplyDelete
  3. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
    பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
    பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
    அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
    இப்படிக்கு
    வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

    ReplyDelete
  4. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செல்லாமலே முழு சம்பளம் கிடைக்கிறது.அவர்களுக்கும் தனியார் யள்ளி போல சம்பளம் பிடித்தம் இருந்தால் அமைதியாக இருப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. மூளையில்லா நண்பருக்கு முதலில் வணக்கம்.100% அனைவரும் நல்லவர்களாக இருக்க முடியாது.அதேபோல தான் ஆசிரிய சமுதாயத்திலும் சில அரைவேக்காடுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக அனைத்து ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக குறை கூறுவது சரியா? கொரோனா தொற்று தீவிரமாக பரவிவந்த சமயத்தில் தன்னார்வலர்களாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு தங்கள் உயிரை இழந்த பல ஆசிரியர்களின் சேவை தங்களைப் போன்ற குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எந்த ஆசிரியருக்கும் உழைக்காமல் ஊதியம் பெற மனம் இல்லை(அரசுப்பள்ளிகளில் சரியாக வேலை பார்க்காமல் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் நபர்களும் இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அவர்களைக் கண்டறிந்து களையெடுக்க வேண்டியது அரசின் கடமை) பள்ளிகளுக்கு செல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையிலும் ஆசிரியர்கள் இப்போதும் பள்ளிக்கு சென்று இதர அலுவலக வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.ஆசிரியர்கள் உழைக்காமலேயே சம்பளம் வாங்குவதாக சொல்லும் உங்களில் பலருக்கு மக்களிடம் வாக்குறுதிகள் பல கொடுத்து வெற்றி பெற்ற பிறகு, மக்களை மனிதர்களாக மதித்து ஏறெடுத்தும் பார்க்காத, மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி என்றைக்காவது விமர்சனம் செய்து பேசியுள்ளீர்களா? இனிமேலும் இம்மாதிரியான தளங்களில் பொத்தாம் பொதுவாக, மக்களை தவறாக வழிநடத்தும் போக்கில் கருத்துகளை பதிவிடுவதை தவிருங்கள். தங்களுக்கு தங்கள் அப்பா யார் அம்மா யார் தெரிந்திருந்தால் தைரியமாக தங்களது பெயருடன் பதிவுகளை இடுங்கள். தங்கள் மீதும் தங்களது கருத்துகள் மீதும் மரியாதை கூடும்.

      Delete
  5. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
    பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
    பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
    அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
    இப்படிக்கு
    வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியான பதிவு

      Delete
    2. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்யாமலே சம்பளம் வாங்குகிறார்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக அளவில் சம்பளம் பெறுகிறார்கள் என்று கூறும் பலருக்கு இந்த பதில் சமர்ப்பணம்.
      1. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை ஆனால் சம்பளத்தை மட்டும் அதிகம் பெறுகிறார்கள் என்று எண்ணம் பலருக்கு உண்டு. ஏன் அரசாங்கம் கூட மக்கள் மனங்களில் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.அதற்கான பதில். ஆசிரியர்களில் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்லவில்லை. மற்ற துறைகளைப் போல ஆசிரியர்களிலும் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் ஊதியம் பெறும் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை.குறிப்பிட்ட சதவீதத்தில் உள்ள அவர்களுக்காக ஒட்டுமொத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் வேலை செய்யாமல் சம்பளம் பெறுவதாக குறை கூறுவது சரியா? பள்ளிகள் திறக்கப்படாத தற்போதைய நிலையிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர அலுவலகம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர் என்பதே உண்மை. ஆனால் இதெல்லாம் குறை கூறுபவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. கொரோனா பரவல் காலத்தில் தடுப்புப் பணியில் தன்னார்வலர்களாக பணியாற்றி உயிரைத் துறந்த பல அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பற்றி குறை மட்டுமே கூறுபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

      2. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பன்மடங்கு ஊதியம் அதிகம் பெறுகின்றனர் என்று கூறும் பலருக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை ஏன் தர மறுக்கிறார்கள் என்றோ அல்லது சம வேலைக்கு சம ஊதியம் தர மறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ தனியார் பள்ளி ஆசிரியர்கள் பக்கம் உள்ள நியாயத்தை தான் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளீர்களா?
      தனியார் பள்ளி நிர்வாகங்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் உழைப்பை 100% எடுத்துக் கொண்டு கொத்தடிமைகள் போல அவர்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான் தெரியும் அந்த வேதனை.

      Delete
  6. சரியான செருப்படி கேள்வி

    ReplyDelete
  7. Government teacher yarum work panurathu ila school ila apram ethuku full salary podurenga government kasu ila solluranga school open ila cls ila work pannamattum salary podalamula

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி